15 YouTube views, likes subscribers in 10 minutes. Free!
Get Free YouTube Subscribers, Views and Likes

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை 11 - மொய்யார் தடம் - திருமுறை - S. BALASUBRAMANIAN

Follow
Saptaswaras

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் 

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக

moyyaar thadampoykai pukku mukaerennak
kaiyaa'r kudai:nthu kudai:nthun kazhalpaadi
aiyaa vazhiyadiyoam vaazh:nthoangkaa'n aarazhalpoa'r
seyyaave'n 'nee'raadee selvaa si'rumarungkul
maiyaar thadangka'n mada:nthai ma'navaa'laa
aiyaa:nee aadko'n daru'lum vi'laiyaaddin
uyvaarka'l uyyum vakaiyellaam uy:nthozhi:nthoam
eyyaama'r kaappaay emaiyaeloar empaavaay

In the dronehovered pool`s deep, we dip and drill;
Stroke our arms in the plunge; we seek your kazhal
There and hail,we of servitorlineage indeed
Survive by your taking, from bonds freed,
Gaining Grace, redeemed thereof!
O, flamered one O, Rich,O, spouse of Uma
Collyrium eyed,slim waisted, Hark!
Save us fleshfallen, we, the frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

Lyric and Meaning Courtesy: thevaaram.org

Sung by: Mast. S. Balasubramanian
(Disciple of Guru Hyderabad Dr. B. Siva)

posted by explorarebv