It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

198 - Sandhana Kaatukullae by Udayalur Kalyanarama Bhagavathar - Alangudi Radhakalyanam 2017

Follow
rkraman

ஸ்ரீ ஸுப்பிரமணிய த்யானம் சந்தன காட்டுக்குள்ளே உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர் ஆலங்குடி ராதாகல்யாணம்

விருத்தம்:
ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளதினில் நினைத்த எல்லாம்
உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே கந்தா
உண்மை அறிவான பொருளே!
பரிவாகவே அநந்தந் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்,
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ?
குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள்
கொடுத்(து)ஆள்வை முத்தையனே!
மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி
மணவாளனே! என் துணைவனே! கந்தா
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே முருகா முருகா முருகா

திருமணி விளங்கும் கிரீடமணி
வானவர் தினம் துதி செய் சிந்தாமணி
செப்பரு மனோன்மணி
வளம் பெரும் சைவமணி
வள்ளியாம் பெண்மணி
மயங்கத் தினைப்புனத்தே
உலாவும் சுப்பிரமணியண் என்னும்
பெருங்குணமணி என் குருமணி
அருணகிரிநாதன் வாக்குக்கு உள்ளம் மகிழ்ந்து
கெதியும் தருமணிநீ ஆதலால்,
அடியனேன் மனத்து இருள் தவிர்த்து
நல்வாழ்வு தருவாய்!
தாமநிலை ஏழ் மருவு
மாடமளி நீடெழில் கொள்
ஸ்வாமிமலை நாதனே முருகா
ஹே ஸ்வாமிநாதா ஹே ஸ்வாமிநாதா
ஹே ஸ்வாமிநாத
கருணாகரா தீனபந்தோ
ஸ்ரீ பார்வதீச முக பங்கஜ பத்ம பந்தோ
ஸ்ரீஷாதி தேவகண பூஜித பாத பத்ம
வல்லீசநாதா  மமதேஹி கராவலம்பம்

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

முருகா முருகா முருகா...

பாடல்:
சந்தன காட்டுக்குளே கந்தனை கண்டு கொண்டேன்தந்தன பாட்டு பாடி எந்தனை  ஏற்றிவிட்டான் முருகன் உந்தனை பிடிக்க நிபந்தனை போட்டிருந்தேன் வந்தனையேவா வா என்றான் முருகன் வந்தவழி போகிவிட்டான்
 
கிட்ட நெருங்கி போய் கட்டிப் பிடித்தபோது எட்டிஉதைத்தானடி முருகன் கொட்டியதே பல் முழுதும் உண்ண உணவெடுத்து கன்னி நான் கண்டுகொண்டால் அண்ணாந்து அருந்தும்  போது  முருகன் மண்ணை அள்ளி  போட்டுவிட்டான் 

மாஞ்சோலை கிளை ஒன்றில் ஊஞ்சல் போல் ஆடுகின்றான் இன்சொல்லால்  பின்னே  வந்து  முருகன் தான்சேதி கேட்பானாடி இத்தனை செய்த இவனை இனி நம்ப வேண்டாமென்றால் அத்தனையும் மறக்குதடி சகியே முருகனை கண்டவுடன்
 
   • 198  Sandhana Kaatukullae by Udayalu...  

Alangudi Namasankeerthana Trust

posted by cigcite5i