Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை 2 - பாசம் பரஞ்சோதி - திருமுறை - S. BALASUBRAMANIAN

Follow
Saptaswaras

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' `நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்!

விளக்கம் : இப்பாடல் உரையாடலாயுள்ளது. பஞ்சணை மேல் நேசம் வைத்தனையோ என்ற கூற்று நகைமொழியாம். விண்ணோர்கள் பயன் கருதி வழிபடுபவர்களாதலின், இறைவன் திருவடியைப் புகழும் பொழுது நாணத்துடன் புகழ்வார்கள் என்பதற்கு, ‘விண்ணோர்கள் ஏத்துவதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்றனர். இதனை,

‘‘வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி’’

என அடிகள் முன்பு அருளிச்செய்ததனால் அறிக. இறைவனிடம் அன்பு பொருந்திய நாம் நமக்குள் அயலவர் அல்லவே? ஆதலால், எள்ளி நகையாட மாட்டோம் என்பார், ‘அன்பார் யாம் ஆர்?’ என்று கூறினார்.

இதனால், நல்லோர் இறைவனிடமே அன்பு செலுத்துவர் என்பது கூறப்பட்டது.

Lyric and meaning courtesy: tamilvu.org
Sung by: Mast. S. BALASUBRAMANIAN
(Disciple of Hyderabad Dr. B. Siva)

#margazhi #thiruppavai #திருவெம்பாவை #lordshiva #manikkavasagar #classical #music #devotional #trending #thevaram #thirumurai

posted by explorarebv