Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள்

Follow
SUN MUSIQ BHAKTHI

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
சங்கடஹர சதுர்த்தி அன்று நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
RENDERED BY : BOMBAY SARADHA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL :    / @vejayaudios  


சங்கடகர சதுர்த்தி:

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.

இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
‪சதுர்த்தியின் மகிமை:

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.


விநாயகரின் வேறு பெயர்கள்:

பிள்ளையார்
கணபதி கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

விக்னேஸ்வரன் விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,onbathu kollum,thirupon kavasam,t.l.maharajan vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs

posted by kleridesjz