Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

துர்கா நட்சத்திரமாலிகா || Durga Natchathiramalika || Ulundurpettai Shanmugam || Vijay Musicals

Follow
Vijay Musical

பாடல் : துர்கா நட்சத்திரமாலிகா || ஆல்பம் : தேவி தரிசனம் || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள் || கடவுள் : அம்மன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || Song : Durga Natchathiramalika || Album : Devi Dharisanam || Singers : Trivandrum Sisters || Lyrics : Ulundhoorpettai Sanmugam || Music : Sivapuranam D V Ramani || Tamil Devotional Songs || Goddess : Amman || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || Ulundurpettai Shanmugam || ஒன்பது நாட்கள் நவராத்ரி பாடல்கள், NINE DAYS NAVARATHRI SONGS, 9 DAYS 9 SONGS FOR NAVARATHI, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, AYUDA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS, NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, SARASWATHI

பாடல்வரிகள் || LYRICS :

ஸ்ரீ துர்கா சரணம் நின்ற பருவதமாகாளி யசோதை வயிறு வாய்த்தவளே
கண்ணன் அவதார நேரத்தில் அன்பில் நீயும் உதித்தாயே

திருமால் செல்லும் இடமெல்லாம் திருமகள் நீயும் வருவாயே
மஹாலக்ஷ்மி சரணம் ஆயர்பாடிக்கு அவன் வந்தான் தேவகி சிறைக்கு நீ சென்றாய்

மாறச் சொன்னது மாயவனே மாற்றி வைத்தவன் வசுதேவன்
நந்தா கோபனின் குலமகளே எங்கள் குலம் காக்கும் திருவே

சர்வ மங்கள மாங்கல்யே கல்யாண குணங்கள் நிறைந்தவளே
காளிதேவி உனைக் கொல்வதற்கு கம்சன் வந்தங்கு சேர்ந்தானே

கல்லில் தூக்கி அவன் எரிந்தானே விண்ணில் பறந்து நீ சென்றாயே
கண்ணன் காலன் என சொன்னாயே நீதி நிலைக்குமென சொன்னாயே

தேவலோகத்து அணிமணிகள் திவ்ய மாலைகள் அசைந்தாடும்
கத்தி கேடயம் கரமேந்தி துர்காதேவி நீ வந்தாயே

பூமி பாரமதில் இறங்கிடவே புண்ய பலன்கள் பல விளைந்திடவே
சேற்றில் வீழ்ந்த பசு கரையேற தூக்கிவிட நீயும் வந்தாயே

துன்பம் தொலைந்தோட வந்தாயே அன்பு வடிவான துர்காவே நமஸ்தே

கறுமை உன்நிறம் பாலபருவம் பனிரெண்டுதான் வயது
வரதாயினி பிரம்மச்சாரிணி பிரம்மம் தான் எப்போதுமே நினைவு

பாலசூரியன் ஒளிமிகு வடிவம் பூர்ணச்சந்திர வதனம்
சாத்வீகம் குணமே சகல சௌபாக்யமும் தந்திடும் காருண்யமே

நான்கு கரங்கள் நான்கு முகங்கள் தேவர் தொழும் பாதம்
மயிலதன் தோகை போலவே கங்கணம் தேயூரம் அங்கதம் ஆகாபுராணம்

அம்பிகே பத்மா திருமால் தர்மபத்னியென வந்தாய்
வானம் முழுதும் உந்தன் சஞ்சார சாம்ராஜ்யமே

மேகம் உன்வண்ணம் கிருஷ்ணா எனும் நாமம் பெற்றாயம்மா
இந்திரன் கொடிமரம் போலும் பருத்த கரங்கள் பொருத்தமே

மலராம் வதனம் போலே தாயே உன் வதனம்
அமுத கலசம் கமலம் வலம்புரி சங்கோ கழுத்து

தேன்குரல் கேட்கும் இனிமை களங்கம் உனக்கில்லையே
பாசம் தனுசுடன் சக்கரம் சகல ஆயுத தாரிணி

குண்டலம் அசைந்தாடிடும் செவிகள் ஓங்காரமோ
நிலவு தோற்கும் அழகு முகமோ சுழன்றாடும் ஒளி வண்ணமோ

மணிக்ரீடம் ஜத்ரமிடை தங்கஜடைப் பின்னலும் என்
மனம்கவர் நெடும் கூந்தலும் அடிதொடும் அது விந்தையே

மூன்று வடம் மேகலை தான் நாகம் சுற்றிய மேரு மலை
மயில் தோகைக் கொடி மேலும் அழகு சேர்க்குமே

தேவிதுர்கா உந்தன் கற்பு விரதம் புனிதமானதே
சொர்கலோகமே தூய்மையானதே சதா பரிசுத்தமே

மஹிஷாசுரன் அவனின் கொடுமையகற்றிய அம்பிகே
மூவுலகையும் நீதான் காத்தாய் பகையை எதிர்கொள்ள அருள்வாய்

ஜெயவிஜயா சூழும்தேவியே உன்னை நம்புவார் ஜெயம் பெறுவார்
காளிதேவியின் கோபமோ எதிரியை ஓடச் செய்யுமே

துஷ்ட நிக்கிரஹ துர்கா சிஷ்ட பரிபாலன ஜெயப்பிரதா
எப்போது நான் நினைத்தாலும் தப்பாது உதவிடுவாய்

எங்கே பயணம் சென்றாலும் உன்னை வணங்கவே தயவே
சந்ததி காக்கும் தாயே சகல சம்பத்துகளும் தா

காட்டு நடுவில் கடல் நடுவில் கள்ளர் நடுவில் பயமே
வேட்டையாட வருவாய் தேவி விட்டு விடுதலையாவோம்

நவதுர்கா மகாகாளி நன்மையே செய்யும் நாரணியே
உன்னைத் தவிர யாருமில்லையே உற்றத் துணை நீ தானே

புகழும் அழகும் பொருளும் தரும் துர்கா யாவற்றிலும் ஜெயமே
செயலை முடிக்கும் திறனைத் தருவாய் வருவாய் சித்தி புத்தி வேண்டுவோம்

பகல் சந்தியாகாலம் இரவு நேரம் எப்போதும் உடனிருப்பாய்
தயை காந்தி சாந்தியை தருவாய் சரணம் சரணம் அம்மா

போன ஜென்மத்தில் செய்த பாவங்கலெல்லாம்
பொடிப்பொடியாக்கிடு போக்கிடுவாய் புவனேஸ்வரி

அத்ஞானம் ஆசா பாசம் அகலச் செய்திடு
துர்கா உன்பாத கமலம் சரணம். . . சரணம் . . .

அடைக்கலம் அடைக்கலம் தாயே அச்சத்தைப் போக்கிடுவாய்
படைக்கலம் உன் பக்க பலம் தான் கடைக்கண்ணாலே பார்த்திடுவாய்

இராஜ பதவி அந்தஸ்து சகலசௌபாக்யம் தருமே
தேவி கௌரி ஸ்ரீதுர்கா ஏழை என்னை காப்பாற்று

கவசமாகக் காப்பாற்று கையைப் பிடித்துக் கரையேற்று
துர்காதேவி காப்பாற்று தொடர்ந்து என்னைக் காப்பாற்று

மனதில் ஏதொரு மாசுமின்றி அம்மா கதி நீயென்றால்
நினைத்த உடனே வந்திடுவாய் நிம்மதியைத் தந்திடுவாய்

துர்கா துர்கா துர்காஸ்மரணம் எப்போதும் அனுக்கிரஹம்
முப்போதும் இதை நினைவில் வைத்தால் துக்கம் ஏது சோர்வேது

நட்சத்திரமாலை இதைப்பாட நலமே நாளும் சேருமே . . .

posted by standolie2f