YouTube magic that brings views, likes and suibscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

அம்மன் 108 பெயர்களும் ஸ்தலங்களும | எத்தனையோ பேர் வழக்கில் | Ethanaiyo Perpadachu | Vijay Musicals

Follow
Vijay Musical

உலகமெல்லாம் படைச்சவளே அன்புமனம் கொண்டவளே உயிர்களெல்லாம் காப்பவளே மங்கலமே அருள்பவளே உனை ஒருபோதும் மரவோமே தாயே

பாடல் : எத்தனையோ பேர் வழக்கில்
ஆல்பம் : கடவுள் பக்தி
பாடியவர் : வீரமணிதாசன்
இசை : சிவபுராணம் D V ரமணி
இயற்றியவர் : முகிலன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
#veeramanidasan#ammansongs#omsakthisong

Song : Ethanaiyo
Album : Kadavul Bakdhi
Singer : Veeramanidasan
Music : Sivapuranam D V Ramani
Lyrics : Mukilan
Video Powered : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals

பாடல்வரிகள் || LYRICS :

எத்தனையோ பேர் வழக்கில் வாழுகின்ற மாரியம்மா
அடி மண்ணையளந்து பொன்னையளந்து ஆடுகின்ற ஆடுகின்ற மாரியம்மா

தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா
தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா

முத்தான மாரி முன்கோபக்காரி காப்பாய் எந்நாளுமே
குறைகேட்பாய் எந்நாளுமே வரம் சேர்ப்பாய் எந்நாளுமே

உலகமெல்லாம் படைச்சவளே உயிர்களெல்லாம் காப்பவளே
தாயே . . . மருவூர் தாயே . . .

எட்டுப்பட்டி ராஜ காளியம்மா எங்க குலதேவி நீயேயம்மா
சேலம் கோட்டையில் வாழ்ந்திடும் தாயே சூழும் வினைகளை தீர்த்திடும் தாயே

பண்ணாரி மாரியம்மன் தாயே எம்மை கண்ணாகக் காப்பவளும் நீயே
படவேட்டில் எல்லையம்மன் தாயே நல்ல வழிகாட்ட வேண்டுமடித் தாயே

மலையரசி என்பவளே மகிமையெல்லாம் புரிபவளே
தாயே . . . மலையனூர் தாயே . . .

தொட்டியத்தில் வாழும் காளியம்மா தொட்டக்குறைத் தீர்க்க வேணுமம்மா
தாயமங்கலம் வாழ்ந்திடும் தாயே தாலிக்காத்திடும் மாரியும் நீயே

குடியாத்தம் நங்கையம்மன் தாயே எங்க குடிகாக்க வேணுமடித்தாயே
கடும்பாடி எல்லையம்மன் தாயே எங்க உடனாடி வந்திடம்மா நீயே

குலமகளாய் இருப்பவளே குங்குமத்தில் நிலைப்பவளே
தாயே . . .கண்ணபுர தாயே . . .

கொல்லங்குடிவாழும் காளியம்மா நல்லக்குறிக்கூற வேணுமம்மா
வீரவாண்டியில் ஆண்டிடும் தாயே தேவி கௌமாரி என்பவள் நீயே

துலசையில் முத்தாரம்மன் தாயே உன் திரிசூலம் காவலடித்தாயே
சைதாபுரி அம்மனென்னும் தாயே எங்கள் சங்கடங்கள் தீர்த்திடணும் தாயே

அன்புமனம் கொண்டவளே ஆனமலை வாழ்பவளே
தாயே . . . மாசாணி தாயே . . .

பட்டுக்கோட்டை வாழும் நாடியம்மா பட்டத்துயர்த்தீர்க்க வாருமம்மா
கோவையாண்டிடும் கோனியம்மனே தேவையாவுமே தீர்க்கும் தெய்வமே

புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாயே எங்க மனக்கோட்டை ஆளவந்தாயே
நிலக்கோட்டை நாச்சியம்மன் தாயே உந்தன் குரல் கேட்டு நாங்க வந்தோம் தாயே

மங்கலமே அருள்பவளே மாங்காட்டில் ஆள்பவளே
தாயே . . . காமாட்சித் தாயே . . .

புத்தேரி வாழும் காளியம்மா குத்தம்குறையேற்று வாடியம்மா
ஆரல்வாய்மொழி இசக்கியம்மனே ஆசை மனமதை ஆளும் அம்மையே

வண்டியூர் தெப்பக்குளம் மாரி உன்னை அண்டிவந்தோம் ஆதரிப்பாய் தாயீ
வடகரை வாழுகின்ற காளி உன்னை வணங்கிட வந்துவிட்டோம் தாயீ

வேப்பிலையில் இருப்பவளே வேண்டுதலை கேட்பவளே
தாயே . . . பாளையத்தாளே . . .

பட்டீஸ்வரம் வாழும் துர்கையம்மா பக்கத்துணையென்றும் நீயே அம்மா
நாகர்கோவிலில் வாழ்ந்திடும் தாயே நாகக்கண்ணியே நலம் புரிவாயே

விழுப்புரத்து வீரவாணி அம்மா எங்க விருப்பங்களை கேட்டிடடியம்மா
திருபுவனம் முத்துமாரியம்மா நல்ல திருப்பங்கள் தந்திடடியம்மா

வைகையிலே வருபவளே மதுரையிலே ஆள்பவளே
தாயே . . . மீனாட்சி தாயே . . .

திண்டீஸ்வரம் வாழும் அபிராமியே தண்டம்விக்கும் உந்தன் இருபாதமே
மோகூர் ஆண்டிடும் மேகவல்லியே யோகம் சேர்த்திடும் மாயக்காரியே

சிறுவாச்சூர் மதுரகாளியம்மா உன் செல்வாக்கு வேண்டுமடியம்மா
சிறுகூடல் முப்பிடாரியம்மா உன் இருபதாம் தஞ்சமடியம்மா

அலைக்கடலில் நடப்பவளே அழகுடனே இருப்பவளே
தாயே . . . வடிவுடைத் தாயே . . .

மட்டப்பாறை வாழும் பேச்சியம்மா நாட்டுவெச்ச சூலம் காவலம்மா
காஞ்சிமாநகர் வாழ்பவள் நீயே காமக்கோட்டத்து காமாட்சித் தாயே

கொள்ளூரு மூகாம்பிகைத் தாயே இனி எல்லாமும் நீதானே தாயே
கொடுங்கல்லூர் பகவதித் தாயே எங்கள் குலம் காக்கும் தேவியடி நீயே

கருணைமனம் உடையவளே கருமாரி என்பவளே
தாயே . . . வேற்காட்டுத் தாயே . . .

தென்குமரி வாழும் கன்னியம்மா முக்கடலின் சங்கமும் நீயே அம்மா
சூரப்பட்டியில் வாழ்ந்திடும் தாயே சூடம் ஏற்றினோம் வந்திடுத் தாயே

படித்துறை வெச்சியம்மன் தாயே வந்து அடிக்கடி பேசுகின்றத் தாயே
மடப்புரம் காளியம்மன் தாயே உன்ன மடிப்பிச்சைக் கேட்டுவந்தோம் தாயே

திருக்கடவூர் வாழ்பவளே அபிராமி தேவியளே
தாயே . . . ஆருயிர் நீயே . . .

மண்டைக்காட்டு பகவதி தேவியம்மா மண்டியிட்டோம் உந்தனடித் தாருமம்மா
காரைக்குடியிலே கொப்புடையம்மா காலச்சக்கரம் நீயடி அம்மா

உறையூறு வெக்காளித்தாயே உனை ஒருபோதும் மரவோமே தாயே
கருகாவூர் கருகாத்தத் தாயே உனைக்கருதாமல் நாண்களில்லை தாயே

அனக்காவூர் வாழ்பவளே பச்சையம்மன் தேவியாளே
தாயே . . . காத்தருள்வாயே . . .

வில்லிவாக்கம் தாந்தோணி மாரியம்மா வல்வினையைத் தீர்ப்பவன் நீயே அம்மா
வேலூர் ஆண்டிடும் செல்லியம்மனே வேண்டும் வரங்களைத் தந்திடுவாயே

சிவகாசி பத்ரகாளித் தாயே உந்தன் செந்தூரம் போதுமடித்த தாயே
அவிநாசி அங்காளித் தாயே உந்தன் அருளுக்கு ஈடு இல்லைத் தாயே

மயிலையிலே உறைபவளே கற்பகமாய் அருள்பவளே
தாயே . . . கோலவிழித் தாயே . . .

முக்கூடல் பவானித் தாயம்மா முன்னிருந்து காப்பவள் நீயே அம்மா
நேமம் வாழ்ந்திடும் நெமிலி அம்மனே நாளும் வணங்கினோம் உந்தன் பாதமே

திருவாரூர் கமலாம்பாள் தாயே உந்தன் திருவடி வேண்டுமடித் தாயே
திருவானைக்காவல் நின்றத் தாயே உந்தன் திருமுகம் காட்டிடடித் தாயே

தில்லையிலே நின்றவளே எல்லைகளை காப்பவளே
தாயே . . . தாண்டவி நீயே . . .

புன்னைநல்லூர் வாழ்பவளே முத்திறக்கும் மாரியளே
தாயே . . . ஈஸ்வரித் தாயே . . .

கங்கைகொண்டசோழபுரம் துர்கையம்மா மங்கையரின் காவல் நீயே அம்மா
ராஜபாளையம் வாழும்மாரியே ராஜபோகமே அருளும் சீலியே

கொல்லிமலை வாழ்கின்றத் தாயே ஒரு பிள்ளைவரம் கேட்டுவந்தோம் தாயே
திருப்பாட்சி வீரம்மா தாயே உனை கைகூப்பி வேண்டிநின்றோம் தாயே

posted by standolie2f