15 Free YouTube subscribers for your channel
Get Free YouTube Subscribers, Views and Likes

பூஜ்ஜியத்தில் இருக்கும் மர்மம் என்ன? இறைவனா? | Ilangai Jeyaraj | Kambavarithy | Ponniyin Selvan

Follow
Ponniyin Selvan

#PonniyinSelvan #பூஜ்ஜியத்தில் #மர்மம் #என்ன? #இறைவனா? #Ilangai #Jeyaraj #Kambavarithy #AroMariya

இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த இலங்கைராஜா, குலமணி ஆகியோரின் மகனாக செட்டிக்குளத்தில் பிறந்த இவர், சிறுபிராயம் தந்தையின் தொழில் காரணமாக புசல்லாவை, புத்தளம் எனக் கழிந்து பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாக சொற்பொழிவுகளை ஆற்றும் இவருக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தலங்காவில் ஆலயத்தினர் கம்பவாரிதி என்ற பட்டத்தை வழங்கினர். இப்பொழுது இவர் கம்பவாரிதி ஜெயராஜ் என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் அறிவுடைய இவர் அவை பற்றி இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவை தவிர ஆண்டுதோறும் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்களையும், இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடாத்தி வருகிறார். அத்தோடு உகரம் இணைய இதழில் தொடர்ச்சியாக இலக்கியம்,அரசியல்,சமயம்,சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருவதோடு வாசகர்களின் கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் பதிலளித்து வருகிறார்.

சாதித்தவை
1980 அகில இலங்கை கம்பன் கழகம் அமைக்கப்பட்டது.
1980 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் 13 கம்பன் விழாக்களையும், கிளைக்கழகங்கள் அமைப்பித்து இலங்கையின் ஏனைய பகுதிகளில் கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், கடும் போர்க்காலத்தில் நடத்தியமை.
1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்கள் நிகழ்த்தியமை. தனது பிரசங்கங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து (ரூ.1000) பிரசங்கங்களின் மதிப்பை உயர்த்தியமை. ஆலயங்களில் பட்டிமண்டபங்களை நடத்தியமை, இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமை.
1986 நல்லூரில் கம்பன்கோட்டக் கட்டிடம் நிறுவல்.
1995 இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடத்தியமை
2003 கொழும்புக் கம்பன்கோட்ட கட்டிடம் நிறுவல்
2005 கொழும்பில் கம்பன்கோட்ட ஐசுவரியலட்சுமி கோயில் நிறுவல்
2016 தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையினை ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயத்தில் நடைமுறைப்படுத்தியமை.

இவரது நூல்கள்
1.அழியா அழகு
2.பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள்
3.உலகம் யாவையும்
4.மாருதி பேருரைகள்
5.விஸ்வரூபம்
6.செல்லும் சொல்வல்லான்
7.ஜெயராஜ்ஜியம்
8.உன்னைச் சரணடைந்தேன்

விருதுகள்
கம்பர் விருது தமிழ்நாடு அரசு (2017)
சித்தாந்த கலாநிதி தருமைபுரம் ஆதீனம் (2017)
சிவஞானக்கலாநிதி திருவாவடுதுறை ஆதீனம் (2015)
கம்ப கலாநிதி இரா. இராதாகிருஷ்ணன் விருது சென்னைக் கம்பன் கழகம்.
உலக சாதனையாளர் விருது பேராசிரியர் அறவாணன் அறக்கட்டளை, தமிழ்நாடு.
பானுமதி அறக்கட்டளைப் பரிசு புதுவைக் கம்பன் கழகம்.
கம்பர்சீர் பரவுவார் விருது வேலூர்க் கம்பன் கழகம்.
கபிலர் விருது திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம்.
கம்பன் விருது சென்னைக் கம்பன் கழகம், 2001.

#PonniyinSelvan
#பொன்னியின்செல்வன்
#AroMariya

posted by Missierhn