The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

மாஞ்சோலை மக்களுக்கு என்ன வழி? ஐகோர்ட் கிடுக்கிபிடி | Manjolai | High Court

Follow
Dinamalar

குத்தகை காலம் முடிந்துவிட்டதால் நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டில் இருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுகிறது.

இதனால் எஸ்டேட்டில் வேலை செய்து வந்த 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.

அவர்களை அங்கிருந்து வெளியேற்ற தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து மாஞ்சோலை தொழிலாளர்கள் சார்பில் அமுதா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

ஜூன் 21ல் மனுவை விசாரித்த ஐகோர்ட், தோட்ட தொழிலாளர்களை மாஞ்சோலையில் இருந்து
வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஐகோர்ட்டில் பொதுநல
மனு தாக்கல் செய்தார்.

மாஞ்சோலையில் வசிக்கும் மக்களின் கருத்தை பரிசீலிக்காமல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 2018ல் அரசு அறிவித்தது.

விருப்ப ஓய்வில் செல்லுமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பிபிடிசி நிறுவனம் கையெழுத்து பெற்றுள்ளது.#Manjolai | High Court

posted by happybodydh