YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆனார் கிருஷ்ணகுமார் | Supreme Court judges

Follow
Dinamalar

ஐகோர்ட் பொறுப்பு தலைமை
நீதிபதி ஆனார் கிருஷ்ணகுமார்
| Supreme Court judges | Justice R. Mahadevan Justice N Kotiswar Singh | madras High Court

சென்னை ஐகோர்ட் பொறுப்பு
தலைமை நீதிபதி ஆர். மகாதேவன்,
ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதி
கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக
நியமிக்க மத்திய அரசுக்கு
சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் குழு
பரிந்துரை செய்திருந்தது.

அதை மத்திய அரசு ஏற்றதை
அடுத்து, நீதிபதிகள் மகாதேவன்,
கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை
மத்திய சட்டத்துறை அமைச்சர்
அர்ஜுன் ராம் மெக்வால் வெளியிட்டார்.

நீதிபதி மகாதேவன்
சென்னையில் பிறந்தவர்.
சென்னை சட்டக்கல்லூரியில்
சட்டம் படித்தார்.

1989ல் வழக்கறிஞர் பணியை
தொடங்கினார்.
சிவில், கிரிமினல் வழக்குகளில்
மிகுந்த அனுபவம் உள்ளவர்.
9 ஆயிரம் வழக்குகளுக்கு மேல்
வாதாடிய வழக்கறிஞர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின்
வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

2013ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்
நீதிபதி ஆனார். 2024ல் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி கோட்டீஸ்வர் சிங்
மணிப்பூரில் பிறந்தவர்.
மணிப்பூரில் இருந்து
சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாகும் முதல் நபர்.

கோட்டீஸ்வர் சிங்
மணிப்பூர் அரசின் முதல்
தலைமை வழக்கறிஞர்
Ibotombi Singh. இபோதோம்பி சிங்கின்
மகன் ஆவார்.

டில்லி சட்டக் கல்லூரியில் சட்டம்
படித்து, 1986 ல் வழக்கறிஞராக
பணியாற்ற தொடங்கினார்.

தந்தையைப்போலவே மணிப்பூர் அரசின்
தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய
பிறகு, நீதிபதி ஆனார். கவுகாத்தி, மணிப்பூர்
ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.
ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியாக
இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக
பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில்
அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின்
எண்ணிக்கை 34.
இதுவரை 32 ஆக இருந்தது.

2 புதிய நீதிபதிகள் நியமனத்தால்
சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதிகள் எண்ணிக்கை
34 ஆக உயர்கிறது.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு
நீதிபதி மகாதேவன் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியானதால்,
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை
நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை மத்திய சட்ட
அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

தாராபுரத்தில் பிறந்த
நீதிபதி கிருஷ்ணகுமார்,
1987 ல் வழக்கறிஞர் பணியை
துவங்கினார்.
தமிழக அரசு மற்றும்
மத்திய அரசின் வழக்கறிஞராக
11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
2016ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்
நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
8 ஆண்டுகளில் பொறுப்பு தலைமை
நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். #SupremeCourtjudges #JusticeR.MahadevanJusticeNKotiswarSingh #madrasHighCourt #

posted by happybodydh