YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

இட்லி தோசைக்கு இந்த சட்னி அரைங்க ! இனிமே எந்த சட்டினியும் அரைக்க மாட்டீங்க !! Tomato chutney.

Follow
Apoorvaa’s Nalabagam

தக்காளி வேர்கடலை சட்னி தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய். 2 மேசை கரண்டி
கடலைப்பருப்பு. 2 மேசை கரண்டி
வறுத்த வேர்க்கடலை. 3 கைப்பிடி ( 50 கி)
வரமிளகாய். 5 Nos
பெரிய வெங்காயம். 1 No
தக்காளி பெரியது. 1 No
புளி. கோலிக்குண்டு அளவு

சட்னி தாளிப்பதற்கு:
எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் இரண்டு
கருவேப்பிலை ஒரு கொத்து.

ingredients,:
Cooking oil. 2 Table spoon
gram dal. 2 Table spoon
peanut. 50 gram
onion. 1 No big size
Tomato. 1 No big size
tamarind. half lemon size
Required salt.


செய்முறை:
1. ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும்
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு வறுக்கவும்.
2.கடலை பருப்பு பொன்னிறமானதும், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மூன்று கைப்பிடி அளவு ( 50 கிராம்) சேர்த்து வறுத்து எடுக்கவும்.
உங்களிடம் வறுத்து வேர்க்கடலை இல்லை என்றால் கடலைப்பருப்புடன் வேர்க்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
3. இவற்றுடன் ஐந்து சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.மிளகாய் வறுபட்டவுடன்
4. பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
5.பெரிய அளவுள்ள தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும்
6. ஒரு கோலிக்குண்டு அளவு புளி சேர்த்து வதக்கவும்.இவை அனைத்தும் நன்கு வதங்கியதும்.அடுப்பை அனைத்து ஆற விடவும்
7. நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து
எடுக்க வேண்டும்.
8. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து கடுகு வெடித்தவுடன்.
ஒரு டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும் உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் இரண்டு வரமிளகாய் கிள்ளி சேர்க்கவும்.
கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து வறுத்து சட்னியுடன் சேர்க்கவும்.

மிகவும் சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி ரெடி.

அபூர்வ மாசலா :
நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.

சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,

தொடர்புக்கு வாட்ஸ்அப் 8148176934

மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp Number 9444176934.

posted by barebear420jk