Secret sauce that brings YouTube followers, views, likes
Get Free YouTube Subscribers, Views and Likes

வேலுண்டு வினையில்லை | Velundu Vinaiyillai | Vaikasi Visakam Murugan Song in Tamil | Anush Audio

Follow
Anush Audio

Song : Velundu Vinaiyillai Lyrics
Murugan Song
Singer : Ayyappadasan
Music : Veeramani Kannan
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#murugansongs #vel #anushaudio
#tamildevotionalsongs #vaikasi

பாடல் : வேலுண்டு வினையில்லை பாடல்வரிகள்
முருகன் பாடல்
குரலிசை : ஐயப்பதாசன்
இசை : வீரமணி கண்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

சூலாயுதம் கொண்டு யம தூதர் வந்து என்னைச்
சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று
கூப்பிடுவேன் அந்த வேளைதனில் மாலான
வள்ளி தெய்வானை யொடு மயில் விட்டு இறங்கி
காலால் நடந்து வரவேணும் என் கந்தப்பனே

முருகா வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே

வேல் முருகா மால் மருகா
வேல் முருகா வேல்
வேல் முருகா மா பழனி
வேல் முருகா வேல்

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன்

விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா

உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா

ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா

ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா

திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா

கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா

வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா

மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா

தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா

வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா

பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா

Check Out our Other Channel 'Anush Music' http://bit.ly/AnushMusic

In Association with Divo
  / divomovies  
  / divomovies  

posted by Adorisioqj